Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.
Tamil Nadu CM Stalin Return From America : ’முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய மு.க.ஸ்டாலின், ’இது அரசியல் நோக்கத்தோடு கூறப்படும் குற்றச்சாட்டு’ என்று தெரிவித்தார்.
''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா?'' என்று மருத்துவ மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.