கொட்டித் தீர்த்த கனமழை.. தொடரும் மீட்பு பணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அதன் மீட்புப் பணிகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 7 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக 2 கவுன்ட்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன.
சென்னையில் நேற்று பெய்த கனமழை இன்று இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது
சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானமணி நகரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
சென்னையில் கனமழை காரணமாக CB சாலை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், MRTS ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் குழு அமைப்பு
மழைநீர் தேங்கியதன் காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்
கனமழை எதிரொலியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.
சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.