தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ். 2026 ஆம் ஆண்டில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
நான் சார்ந்திருக்கும் பிரதமர் மோடி முதல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா இருப்பதாக அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.