K U M U D A M   N E W S
Advertisement

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

'தமிழ்நாட்டு பள்ளிகளின் அவலநிலை தெரியுமா?'.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்வி!

''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?

Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.

"ஸ்டேட் போர்டு பாடத்திட்டம்" - ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!

Anbil Mahesh respond to RNRavi: மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியை கிறிஸ்தவ மத போதகர்கள் அழிக்க முயன்றனர் - ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி   குற்றம் சாட்டியுள்ளார்.

மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி

மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.