"பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" - EPS காட்டம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்
Divya Satharaj Join DMK : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திவ்யா
திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரியாரையும், அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது என்று திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.
ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒருநபர் குழு அறிவித்துள்ளது.
காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.