தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசல் காரணமாக, சிறுவர்கள், பெண்கள் உட்படப் பலர் மயக்கமடைந்தனர். இதில், பத்து பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பரப்புரை விவரம்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்புப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று (சனிக்கிழமை) நாமக்கல்லில் பரப்புரையை நிறைவு செய்தபின், கரூரில் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
கூட்ட நெரிசலும் சிகிச்சை அளிப்பதில் சிரமமும்
கரூரில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில், சிறுவர்கள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
மயக்கமடைந்தவர்களை நிர்வாகிகள் தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுகள் வரிசையாக வந்தபோதிலும், கூட்ட நெரிசல் காரணமாக அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
10 பேர் உயிரிழப்பு
மயக்கமடைந்தவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிறுவர், சிறுமிகளை பெற்றோர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. இந்த நெரிசலில் சிக்கிய சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு கரூர் போலீஸ் சூப்பிரெண்டு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்தச் சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.