சினிமா

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' திரைப்படம்.. வெளியான புதிய அப்டேட்!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' திரைப்படம்.. வெளியான புதிய அப்டேட்!
Retta Thala
நடிகர் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள 'ரெட்ட தல' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை, படக்குழுவினர் இன்று போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பு மற்றும் நடிகர்கள்

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2024-இல் தொடங்கி அக்டோபர் 2024-இல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அருண் விஜய்யுடன் இந்தப் படத்தில் நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரவேற்பை பெற்ற பாடல் மற்றும் டீசர்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ”கண்ணம்மா” எனும் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்தார். இந்தப் பாடல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ‘ரெட்ட தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.