”ஒரு கோப்பை தேநீர் அருந்தும் அவகாசத்தில் ஒரு ஆயுள் கால நட்பை உருவாக்க கூடியவன். அவன் எரிச்சல் அடைந்திருக்கான், பொறாமைப்பட்டதில்லை. அவன் பேரன்பின் ஆதி ஊற்று” - நா.முத்துக்குமார் குறித்து இயக்குநர் ராம் உதிர்த்த வார்த்தைகள் இது. மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் நா.மு குறித்த நினைவலைகளை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பாடலாசிரியர்கள் என பட்டியலிட்டால் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கை அமரன் வரிசையில் காலத்தாலும் அழிக்க முடியாத வகையில் நா.முத்துக்குமாருக்கும் ஒரு இடம் இருக்கும். தனது எளிமையான பாடல் வரிகளால் ஒரு தசாப்த காலங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகை ஆண்டு கொண்டிருந்தார் என்றால் மிகையல்ல.
1975 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், 2000 ஆம் ஆண்டு வெளியான 'வீரநடை' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
வேடிக்கை பார்ப்பவன்:
நா.முத்துக்குமார் பாடலாசிரியர் மட்டுமல்ல, கட்டுரை, கவிதை, கதைகள் என இலக்கியுலகத்தை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தார். பட்டாம்பூச்சி விற்பவன், வேடிக்கை பார்ப்பவன், அணிலாடும் மூன்றில், பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு போன்ற நூல்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றவை.
யுவனும்- நா.முத்துக்குமாரும் இணைந்தால் அங்கு ஒரு மேஜிக் நடக்கும் என்பது எழுதப்படாத விதி. யுவன் மட்டுமல்ல, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் குட் புக்கிலும் நா.முத்துக்குமார் இடம் பிடித்திருந்தார். 1500-க்கும் மேற்பட்ட திரையிசை பாடல்களை எழுதியுள்ள நா.முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.
தங்கமீன்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்காகவும், சைவம் திரைப்படத்தில் இடம்பெற்ற “அழகே அழகே” பாடலுக்காகவும் தேசிய விருதினை நா.முத்துகுமார் வென்றிருந்தார். புகழின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே தனது 41-வது வயதில், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி மஞ்சள் காமாலை நோயால் காலமானார்.
ஆனந்த யாழ் மீட்டவன்: இயக்குநர் ராம்
அவரது மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது. தரமணி படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக நா.முத்துகுமார் காலமானார். அவரது நெருங்கிய நண்பரான இயக்குநர் ராம் மற்றும் யுவன் இணைந்து தரமணி படத்தின் ஆல்பத்தில் “From the bottom of our hearts" என்கிற ஆடியோ ஒன்றினை இணைத்தனர்.
அதில் நா.முத்துக்குமார் பற்றி இயக்குநர் ராம், ”நா.முத்துகுமாரின் ஆனந்த யாழ் மீட்டப்படாத வீடில்லை. யாரும் எளிதில் அடைந்துவிடாத மலை உச்சியில் நா.முத்துக்குமார் நின்று கொண்டிருந்தார். அந்த மலை உச்சியானது ஆபத்தானது. குளிரும் அதிகம், வெப்பமும் அதிகம், பேய் காற்று சுழன்று அடிக்கும். மழை பெய்யாது கொட்டும். அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த நா.முத்துக்குமார், அதற்கான எந்த பெருமையும், அகந்தையும் இல்லாமல் அறத்தோடும் எளிமையோடும் நின்று கொண்டிருந்தான். அவனே பற்றி, அவனது வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், அவன் பேரன்பின் ஆதி ஊற்று. முத்து இருப்பான். அவனுடைய பாடல்கள் ஒலிப்பரப்படும் ஒவ்வொரு நொடியும் அவன் வாழ்ந்து கொண்டிருப்பான். தரமணி அவனது இறுதி ஆல்பம் அல்ல” என குறிப்பிட்டு இருப்பாரு.
அதுதான் உண்மையும் கூட.. காலத்தின் ஓட்டத்தில் நா.முத்துக்குமார் தனது படைப்பால் இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.