3வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபஸில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மெர், பூஜ், குவார்பெட், லாக்கி நாலா உள்ளிட்டப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் கண்டறியப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
தொடர்ந்து, இருநாடுகளும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், பாகிஸ்தானின் ட்ரோன் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானை ஒட்டி எல்லை பகுதியான பஞ்சாப்பை குறிவைத்து பாகிஸ்தான் 3 நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தானின் ட்ரோன் விழுந்து கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் அதில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு எதிராக கடந்த 2 நாட்களாக பாகிஸ்தான் பயன்படுத்துவது துருக்கி தயாரிப்பான சோன்கர் டிரோன்கள் எனவும், ராணுவ வீரர்களுக்கு பதில் கையெறி குண்டுகளை வீச சோன்கர் டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 400 முதல் 450 மீட்டர் தொலைவு வரை கையெறி குண்டுகளை சோன்கர் டிரோன்கள் வீச முடியும் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.