இந்தியா - பாக். போர் பதற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

  இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லிவிட் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய எல்லை பகுதியில் ட்ரோன், பீரங்கி, போர் விமானங்கள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் முப்படைகளும் தாக்குதலில் இறங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இரண்டு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இருநாடுகளுக்கும் மத்தியில், போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதலை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருநாடுகளும் இந்த விஷயத்தில் பதற்றத்தை தணிக்க முடிவு எடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் பல வருடங்களாக பிரச்னைகளை கொண்டுள்ள நாடு என்பதை அமெரிக்க அதிபர் அறிவார் என்றும், இந்த பிரச்னை விரைவில் தணிய வேண்டும் என்று தான் அதிபர் டிரம்ப் விரும்புவதாகவும் தெரிவித்த்தார்.