ஐபிஎல் 2025

IPL 2025 Match Suspended: இந்தியா,பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ரத்து?

IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2025 Match Suspended: இந்தியா,பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ரத்து?
ஐபிஎல் போட்டிகள் ரத்து?
IPL 2025 Match Suspended Due To India Pakistan War : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடர் நாடு முழுவதும் உள்ள முக்கிய மைதாங்களில் நடைபெற்று வந்தது.

ஐபிஎல் தொடர்:

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுக்கும் மொத்தமாக, 74 லீக் போட்டிகளுக்கான அட்டவணை தயார் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 58 போட்டிகள் நிறைவடைந்து, 12 லீக் போட்டிகள் மீதமிருந்தன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐபிஎல் போட்டிகள் இந்திய எல்லையை ஒட்டியுள்ள மைதானங்களுக்கு பதிலாக வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடர் முற்றிலும் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, இந்தியாவின் எல்லையோர உள்ள மாநிலங்களில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், ( மே 8) ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வீரர்கள் கோரிக்கை:

ஐபிஎல் தொடரில் பெரும்பாலான வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இங்குள்ள சூழ்நிலையால், தங்களது நாட்டுக்கே செல்ல வேண்டும் என்று பிசிசிஐ-க்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சூழலில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துபாயில் நடத்தியது போன்று தற்போதும், வெளி நாட்டில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அரசின் அறிவுரையையும் கேட்டு, ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா என்று முடிவெடுக்கப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் கருத்து:

பரபரப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர், பாகிஸ்தான், இந்தியா இடையே நடைபெறும் தாக்குதல் காரணமாக கைவிடப்பட்டதால், ஆன்லைனில் கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மறுபுறம் , இதுபோன்ற பரபரபான சூழலில், ஐபிஎல் போட்டி அவசியமற்றது என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.