இந்தியா

யாரு சாமி நீ.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டியின் பேன்சி நம்பருக்கு ரூ14 லட்சமா?

இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.14 லட்சம் கொடுத்து HP21C-0001 என்ற ஃபேன்சி எண்ணை சஞ்சீவ் என்ற நபர் வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் யாரு சாமி நீ , ரொம்ப வசதியா இருப்பாரோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

யாரு சாமி நீ..  ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டியின் பேன்சி நம்பருக்கு ரூ14 லட்சமா?
யாரு சாமி நீ.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டியின் பேன்சி நம்பருக்கு ரூ14 லட்சமா?
இமாச்சல பிரதேசத்தில் வியப்பூட்டும் ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. வழக்கமான விலை ரூ.1 லட்சம் இருக்கும் ஸ்கூட்டிக்கு, சஞ்சீவ் என்ற நபர் ரூ.14 லட்சம் செலுத்தி ஃபேன்சி எண்ணை (fancy number) பெற்றுள்ளார். HP21C-0001 என்ற இந்த வாகன எண், அந்த மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்ட மிக அதிக விலை கொண்ட எண்ணாகும்.

இந்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இது குறித்து ரூ.14 லட்சம் செலவு செய்த சஞ்சீவ் கூறியதாவது, “எனக்கு சிறப்பு எண்ணுகள் மீது நல்ல ஆர்வம் உள்ளது. இது ஒரு ஹாபி மாதிரி என்று தெரிவித்துள்ளார். அந்த எண்ணை நான் வாங்கி வைத்திருப்பது, தனித்துவமானதொரு அடையாளமாகவும், இதனை முதலீட்டாகவும் பார்பதாக தெரிவித்துள்ளார். தனித்துவமான எண்களை சேகரிப்பதன் மீது உள்ள ஆர்வத்தால் இவ்வாறு செய்ததாக சஞ்சீவ் கூறியுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்ட மிக விலையுயர்ந்த எண் இது என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், யாராவது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.14 லட்சம் செலவு செய்வார்களா என்று இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பலரும் “நல்லா இருக்கு சார் உங்க வியாபாரம்!” என்ற நகைச்சுவையுடன் வரவேற்க, சிலர் இது தேவையற்ற வீண் செலவாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், வாகன எண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், சிலருக்கு அது வெறும் பதிவு எண்ணாக இல்லாமல், பெருமை, தனிச்சிறப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்பதையும் இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது.