முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். நீதிபதி வர்மா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது, அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டுக்கட்டாக எரிந்த ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும், நீதிபதி வர்மாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தும் அவர் குற்றவாளி என்று கண்டறிந்தது.
இந்த கண்டனத் தீர்மானம் குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அரசாங்கத்தால் கண்டனத் தீர்மானம் கொண்டுவர முடியாது. அரசியலமைப்பின் 124வது பிரிவு, லோக்சபாவில் 100 எம்.பி.க்கள் அல்லது ராஜ்யசபாவில் 50 எம்.பி.க்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம் என்று தெளிவாகக் கூறுகிறது. நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் எம்.பி.க்களும் லோக்சபாவில் தீர்மானத்தில் கையெழுத்திடுகிறார்கள். இது பதவி நீக்கத்திற்கானதல்ல, ஆனால் 1968 நீதிபதிகள் சட்டத்தின் கீழ் சபாநாயகரால் மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கானது என்றார்.
மேலும், நீதிபதி சேகர் யாதவ் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்தும் ரமேஷ் தனது கருத்தை பதிவு செய்தார். நீதிபதி யாதவ் கடந்த ஆண்டு ஒரு வெறுப்புப் பேச்சு நிகழ்த்தியதாக கூறி, 55 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் பதவி நீக்க நோட்டீஸ் கொடுத்திருந்தனர். "நீதிபதி யாதவ் தனது பதவிப் பிரமாணத்தையும், அரசியலமைப்பின் அனைத்து கோட்பாடுகளையும் மீறிவிட்டார். ஏழு மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை. நான் ராஜ்யசபா தலைவரை பலமுறை சந்தித்தேன், இன்னும் அந்த தீர்மானம் நிலுவையில் உள்ளது" என்று ரமேஷ் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி வர்மா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிரான உள்விசாரணைக் குழுவின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், தன்னை பதவி நீக்கம் செய்யுமாறு முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அளித்த பரிந்துரையையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதித்துறையில் நடக்கும் இந்த சம்பவங்கள் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும், மக்களின் நம்பிக்கை காக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.