மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது உலகில் உள்ள 193 நாடுகளில் 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் காங்கிரஸ் கட்சி மட்டும் அதனை ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மோடி சாடினார். பஹல்காம் தாக்குதல் நடந்த மூன்றாவது நாளிலேயே காங்கிரஸ் கட்சி அதில் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டதாகப் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.
இந்தியா யாரையும் நம்பியதில்லை. ஆனால், பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் இருக்கிறது. மக்கள் மனங்களில் சந்தேக விதைகளை விதைக்கக் காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்றும் பிரதமர் சாடினார். பாகிஸ்தானின் இசைக்கு ஏற்றவாறு காங்கிரஸ் கட்சி பாடுவதாக விமர்சித்த பிரதமர், காங்கிரஸ் கட்சி தங்களின் திட்டங்களைப் பாகிஸ்தானில் இறக்குமதி செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் கட்சியால் தலைப்புச் செய்திகளை உருவாக்க முடியுமே தவிர, மக்களின் மனங்களை ஒருபோதும் வெல்ல முடியாது என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதிகள்மீது துல்லிய தாக்குதல் நடத்தினால் காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்கிறது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட்டபோது காங்கிரஸ் அதனைக் கொண்டாடியதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதனைத் தாரைவார்த்தது யார் என்று காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தியாவின் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலம் தாரைவார்க்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நேருவின் தவறான கொள்கையால் சிந்துநதி நீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இணைக்கப்பட்டது. இதனால் சிந்து நதிநீர் 80 விழுக்காடு நமது எதிரிகளுக்குச் செல்கிறது என்றும் பிரதமர் கூறினார். இந்திரா காந்தி தமது ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தார்.
இதனால் தமிழ்நாடு மீனவர்கள் தற்போது வரை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை. ஆனால், தற்போது நமது சுயசார்பு கொள்கையை விமர்சிக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார். வெளியுறவுக் கொள்கைகுறித்து காங்கிரஸ் கட்சியிடம் எந்தத் திட்டமும் இல்லை ஆனால் அவர்கள் தற்போது எங்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள் என்றும், எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள் என நாட்டு மக்கள் எள்ளி நகையாடுவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.