இந்தியா

நாய்கள் அதிகம் உள்ள நாடுகள்.. டாப் 10 பட்டியலில் இந்தியா!

உலகளவில் அதிக நாய்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

நாய்கள் அதிகம் உள்ள நாடுகள்.. டாப் 10 பட்டியலில் இந்தியா!
Countries with the most dogs in the world
இந்தியாவில் சுமார் 1.53 கோடி தெரு நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், டெல்லி-என்சிஆர் பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அடுத்த ஒரு வருடத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 70% நாய்களுக்குக் கருத்தடை செய்து தடுப்பூசி போடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா இந்த பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் நாய்களின் தொகை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்தபோது, சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் என ஒட்டுமொத்தமாக உலகிலேயே அதிக நாய்களின் தொகை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில், சீனா

இந்த மூன்று நாடுகளில்தான் உலகிலேயே மிக அதிக நாய்கள் உள்ளன. அமெரிக்காவில் சுமார் 7.5 கோடி நாய்கள் இருக்க, பிரேசில் 3.5 கோடி நாய்களுடன் இரண்டாவது இடத்திலும், சீனா 2.7 கோடி நாய்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தியா

இந்தியாவில் மட்டும் சுமார் 1.53 கோடி தெரு நாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அடுத்த ஒரு வருடத்திற்குள் 70% நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா & ஜப்பான்

5வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் சுமார் 1.5 கோடி நாய்கள் உள்ளன. அங்கு தெரு நாய்கள் அதிகரித்துவரும் நிலையில், மக்களும் அதிகாரிகளும் அவற்றைப் பராமரித்து வருகின்றனர். 6வது இடத்தில் இருக்கும் ஜப்பானில் 1.2 கோடி நாய்கள் உள்ளன. இங்கு பலர் குழந்தைகளைப் பெறுவதற்குப் பதிலாக, செல்லப் பிராணிகளைத் தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் & அர்ஜென்டினா

7வது இடத்தில் இருக்கும் பிலிப்பைன்ஸில் 1.16 கோடி தெரு நாய்கள் உள்ளன. இங்கு ரேபிஸ் தோற்று அதிகரித்து வரும் நிலையில், நாய்களை கொல்வதற்குப் பதிலாக மனிதாபிமான முறையில் தடுப்பூசி மற்றும் கருத்தடைத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. 8வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவில் சுமார் 92 லட்சம் நாய்கள் உள்ளன. இங்கு நாய்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பைக் உறுதி செய்ய அரசாங்கம் தடுப்பூசி மற்றும் கருத்தடைத் திட்டங்களை நடத்துகிறது.

பிரான்ஸ் & ருமேனியா

9வது இடத்தில் இருக்கும் பிரான்சில் 74 லட்சம் நாய்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் கட்டாயம். பிரான்சில் கடுமையான தடுப்பூசி விதிகளால் ரேபிஸ் நோய் மிகவும் குறைவு. 10வது இடத்தில் உள்ள ருமேனியாவில் சுமார் 41 லட்சம் நாய்கள் உள்ளன. இங்கு சுமார் 41 லட்சம் நாய்கள் உள்ளன. 1980களில் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்தபோது, செல்லப் பிராணிகளை கைவிட்டதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தது.