துருவ் ராட்டி இந்த பெயரை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது முணுமுணுக்காத அரசியல் வாதிகள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக இந்தியாவை ஆளும் பாஜகவினர். துருவ் ராட்டி இயல்பில் கற்றல் தொடர்பான காணொளிகளை பதிவிடும் யூடியூபராக தான் அறியப்பட்டார். எப்போது பாஜக மற்றும் மோடியின் பிம்பத்தை உடைக்கும் வகையில் காணொளி பதிவிட ஆரம்பித்தாரோ, அப்போது முதல் அரசியல் வட்டாரத்தில் அவர் பெயர் அடிபடத் தொடங்கியது.
எந்தளவிற்கு இவருடைய வீடியோ சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், தேர்தல் பரப்புரையின் போது இவரது காணொளிகளை எதிர்கட்சிகள் வீதிகளில் பாஜகவிற்கு எதிராக ஒளிப்பரப்பி வாக்கு சேகரிக்க தொடங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பாஜக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையினை இழக்க துருவ் ராட்டி பதிவிட்ட காணொளிகளும் ஒரு காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.
இந்நிலையில், "முகலாயர்களை அச்சுறுத்திய சீக்கிய வீரன்" (The Sikh Warrior Who Terrified the Mughals) என்ற தலைப்பிலான AI-மூலம் உருவாக்கிய வீடியோவினை தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டார் துருவ் ராட்டி. இந்த வீடியோவானது, சீக்கிய மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் துருவ் ராட்டி அந்த வீடியோவினை தனது யூடியூப் தளத்திலிருந்து நீக்கியுள்ளார்.
சர்ச்சைக்கு காரணம் என்ன?
சீக்கிய மதத்தில், மத குருமார்கள், சாஹிப்சாதாக்கள் (பத்தாவது குருவின் மகன்கள்), மற்றும் அவர்களது குடும்பத்தினர் போன்ற புனிதமான ஆளுமைகளை மனித உருவிலோ அல்லது திரைப்படங்களிலோ சித்தரிப்பது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இது "ரெஹத் மரியாதா" (Rehat Maryada) என்று அழைக்கப்படும் சீக்கியர்களின் மதக் கோட்பாடு மற்றும் நடத்தை விதிகளின் ஒரு பகுதியாகும்.
சீக்கியர்கள் தங்கள் குருமார்களை ஆன்மீக ஒளியாக கருதி தான் வணங்குகிறார்கள். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துருவ் ராட்டி பதிவிட்ட வீடியோவில் குரு கோவிந்த் சிங் மற்றும் அவரது மகன்கள் மனித வடிவில் சித்தரிக்கப்பட்டு இருந்தார்கள். மேலும், வீடியோவில் வரலாற்றுத் தவறுகள் இருப்பதாகவும், சீக்கிய வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள் தவறாகப் சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வீடியோ வெளியான உடனேயே, சீக்கிய மத அமைப்புகள் மற்றும் மதக்குரு தலைவர்கள் துருவ் ராட்டிக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
எஸ்.ஜி.பி.சி (SGPC- Shiromani Gurdwara Parbandhak Committee) தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி இதுக்குறித்து கூறுகையில், "இத்தகைய சித்தரிப்புகள் சீக்கியக் கொள்கைகளையும், மரபுகளையும் மீறுகின்றன. சீக்கிய மதத்தில், குருமார்கள், சாஹிப்சாதாக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மனித உருவிலோ அல்லது திரைப்படங்களிலோ சித்தரிக்கப்பட கூடாது" என்று குறிப்பிட்டார்.
மேலும், டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (DSGMC) சைபர் கிரைம் பிரிவில் துருவ் ராட்டிக்கு எதிராக புகார் அளித்தது. டி.எஸ்.ஜி.எம்.சி தலைவர் ஹர்மீத் சிங் கால்கா கூறுகையில், ”இந்த வீடியோ சீக்கிய குருமார்களின் புனிதமான உருவங்களை ஏஐ-யால் உருவாக்கியது மட்டுமல்லாமல், குரு தேக் பகதூர் ஜி மற்றும் பாபா பந்தா சிங் பகதூர் ஜி ஆகியோர் குறித்து தவறான தகவலையும் குறிப்பிட்டுள்ளது” என்றார்.

துருவ் ராட்டி விளக்கமும்- வீடியோ நீக்கமும்:
சர்ச்சையைத் தொடர்ந்து, துருவ் ராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”The Sikh Warrior Who Terrified the Mughals” வீடியோ தொடர்பான ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”தனது வீடியோவுக்குப் பல நேர்மறையான கருத்துகள் கிடைத்திருந்தாலும், "சீக்கிய குருமார்களின் அனிமேஷன் சித்தரிப்பு" சீக்கிய மதத்தை சார்ந்த சிலரை காயப்படுத்தியுள்ளது என்பதை உணர்கிறோம். அதனால் நாங்கள் பதிவிட்ட வீடியோவினை நீக்க முடிவு செய்துள்ளோம். மேலும், இந்த வீடியோ எந்த வகையில் அரசியல் அல்லது மத சர்ச்சையாக மாற நான் விரும்பவில்லை, ஏனெனில் இது நமது இந்திய ஹீரோக்களின் கதைகளை ஒரு புதிய கல்வி வடிவத்தில் காட்சிப்படுத்தும் ஒரு முயற்சி மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.
துருவ் ராட்டியின் யூடியூப் சேனலை 28 மில்லினியனுக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.