இந்தியா

e Passport : இனி ஏமாற்ற முடியாது.. இ-பாஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்!

உலக அளவில் பாதுகாப்பு மற்றும் அடையாள செயல்முறைகளை மேம்படுத்தும் முயற்சியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் (PSP) பதிப்பு 2.0 இன் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

e Passport : இனி ஏமாற்ற முடியாது.. இ-பாஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்!
இ-பாஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்
பயண ஆவண செயல்முறையை மேம்படுத்துவதிலும் நவீனமயமாக்குவதிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். புதிய இ-பாஸ்போர்ட்டுகள் பாரம்பரிய பாஸ்போர்ட் சிறு புத்தக வடிவமைப்புடன் மின்னணு அம்சங்களை ஒருங்கிணைத்துள்ளது. இந்நிலையில் பாஸ்போர்ட் சரிபார்த்தலை எளிதாக்க மத்திய அரசு போலி பாஸ்போர்ட் எண்ணிக்கை குறைக்க முக்கிய முடிவை எடுத்துள்ளது.

பாஸ்போர்ட் சரிபார்த்தல் பல கட்டண சோதனைகளுக்கு உட்பட்டதாக உள்ள நிலையில், போலி பாஸ்போர்டுகளை கண்டறியும் வகையில் பாஸ்போர்ட் சரிபார்த்தல் சற்று கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணங்களின்போது பாஸ்போர்ட் சரிபார்த்தல் முறை சற்று கடினமாக உள்ள நிலையில், அதனை எளிதாக்கும் வகையிலும், பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு பாஸ்போர்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாஸ்போர்ட் சேவா 2.0 திட்டத்தின் கீழ் இந்த இ-பாஸ்போர்ட் திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறை ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறாது.

உயர் மட்ட தரவு பாதுகாப்பு, சிப் பொருத்தப்பட்டுள்ள இந்த இ பாஸ்போர்டில், பயோமெட்ரிக் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. சர்வதேச பயணத்தின் போது அடையாளச் சரிபார்ப்புகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்குப் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறைந்து, போலி பாஸ்போர்ட்களின் பயன்பாடுகள் குறையும் என கூறப்படுகிறது.

தற்போது முதற்கட்டமாக இ பாஸ்போர்ட் சில முக்கிய நகரங்களில் வழங்கப்படுகிறது. சோதனை முயற்சியாக நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு மற்று காஷ்மீர், கோவா, சிம்லா, ராய்ப்பூர், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், ராஞ்சி, மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள பிற நகரங்களுக்கும் படிபடியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ்போர்ட் பெற விரும்புவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து, சென்னை, நாக்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா மையங்கள் அல்லது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்கள் இ-பாஸ்போர்ட்டை பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.