இது குறித்து டிரம்ப் கூறியதாவது, "நேற்று டிம் குக் உடன் சிறிய பிரச்சினை பற்றி பேசினேன். நான் அவரிடம், 'நண்பரே, உங்களை நாங்கள் நல்ல முறையில் தான் டீல் செய்து வருகிறோம். நீங்கள் 500 பில்லியன் டாலர் முதலீட்டை அமெரிக்காவில் செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இந்தியா முழுவதும் உற்பத்தி தொழிற்சாலைகளை கட்டி வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்தியாவில் உற்பத்தி செய்வதில் எனக்கு விரும்பவில்லை' என்று சொன்னேன்", என்று கூறினார்.
"இந்தியா உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். எனவே, அங்கு பொருட்களை விற்பது மிகக் கடினம். சீனாவில் நீங்கள் பல ஆண்டுகளாக கட்டிய தொழிற்சாலைகளைப் பொறுத்துக்கொண்டோம். இப்போது இந்தியாவில் தொழிற்சாலைகள் கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்தியா தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்' என்றும் டிம் குக்கிடம் சொன்னேன்", என்று டிரம்ப் கூறினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தனது உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். எனினும், இந்த உரையாடலின் விளைவுகள் அல்லது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதலீடு திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கூடுதல் விவரங்களை அவர் பகிரவில்லை.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பிரச்சினை:
டிரம்பின் இந்த கருத்துகள், இந்தியாவின் எஃகு மற்றும் அலுமினியம் ஏற்றுமதிகளுக்கு வரிகளை அமெரிக்கா உயர்த்தியதற்கு பதிலடியாக, இந்தியா எதிர்வரி விதிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து வெளியாகியுள்ளன. இருப்பினும், புளூம்பர்க் நிறுவனத்தின் தகவல்களின்படி, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. மே 17 முதல் 20 வரை இந்திய வர்த்தக அமைச்சர் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
டோகா நிகழ்ச்சியில் டிரம்ப் மேலும் கூறியதாவது, "இந்தியா அமெரிக்காவிடம் ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதன்படி, அவர்கள் அமெரிக்கப் பொருட்களுக்கு எந்த சுங்கவரியும் விதிக்க மாட்டார்கள்." இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விவரங்களை அவர் விளக்கவில்லை. இந்தியா-அமெரிக்கா இடையேயான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் 2020 பிப்ரவரியில் நரேந்திர மோடி வாஷிங்டனில் டிரம்பைச் சந்தித்தபோது கையெழுத்தானது.
இந்தியா-பாகிஸ்தான் விவகாரம்:
புளூம்பர்க் செய்தியின்படி, இந்திய அதிகாரிகள் டிரம்பின் சமீபத்திய கருத்துகளால் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இராணுவ மோதலுக்கு தீர்வு காண்பதற்காக வர்த்தக ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டதை இந்தியா மறுத்துள்ளது. பாகிஸ்தான்-இந்தியா மோதலை முடிவுக்கு கொண்டு வர, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக விவகாரங்களை இணைத்து விவாதித்ததாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இந்திய தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள்:
ஆப்பிள் சமீப ஆண்டுகளில் இந்தியாவில் தனது உற்பத்தியை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஃபாக்ஸ்கான் (Foxconn) மற்றும் விஸ்ட்ரான் (Wistron) போன்ற ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் பல ஐபோன் மாடல்களை இந்தியாவில் தயாரிக்கிறது. மின்னணு துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், இறக்குமதியைக் குறைக்கவும் இந்திய அரசின் இலக்குகளுக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது. இது இப்படி இருக்க, டிரம்பின் சமீபத்திய கருத்துக்கள் இந்தியாவை பாதிக்கும் வகையில் உள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளில் ஒரு சிக்கலான கட்டத்தை இது எடுத்துக்காட்டுகின்றன. இரு நாடுகளும் தற்போதைய பதற்றங்களுக்கிடையே வர்த்தக ஒப்பந்தத்தை அடையவும் முயற்சித்து வருகின்றன.