ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதன் முறையாக சென்றார். ஸ்ரீநகரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர், இந்திய ராணுவம் தாக்கி அழித்த பாகிஸ்தானின் ஆயுதங்களை பார்வையிட்டார். இதையடுத்து ராணுவத்தினரிடம் உரையாடி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து ராணுவத்தினருடன் இணைந்து அமைச்சர், ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையால் முழு தேசமும் பெருமை கொள்வதாகக் கூறினார். பாதுகாப்புத்துறை அமைச்சராக இல்லாமல், இந்தியக் குடிமகனாக ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தியா தனது மக்களை பாதுகாப்பதுடன், எதிரி நாட்டுக்கு பதிலடி தருவதும் நிரூபணம் ஆகியுள்ளது. முரட்டுத் தனமான நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா?, பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பதை சர்வ தேச அணு ஆயுத முகமை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், பாதாமி கண்டோன்மெட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத வெடி குண்டுகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.