இன்று காலையில் டெல்லியில் உள்ள முக்கியமான சாலையில் வழக்கமான நடை பயிற்சி செல்லும் பாதையில் காங்கிரஸ் எம்பி சுதா நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அவர் அணிந்திருந்த 4.5 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இந்தத் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சுதா, உடனடியாக அருகில் இருந்த சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல்வேறு முக்கிய நபர்கள் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் சாணக்யபுரியிலேயே இத்தகைய துணிகர சம்பவம் நடந்தது காவல்துறையினரைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்கச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட பகுதியில் எம்.பி-க்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது, தலைநகரின் சட்டம் ஒழுங்கு நிலைகுறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த சுதா, "முக்கியமான இடத்தில் கூடப் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது" என்று கவலை தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரைப் பிடிக்கத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.