சில தினங்களுக்கு முன்பு தான், பெங்களூருவில் வங்கி வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ வங்கி மேலாளர் ஒருவரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையினை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் அரசியல் ரீதியாக பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.
அதனைத் தொடர்ந்து வங்கி மேலாளரை இடமாற்றம் செய்தது எஸ்பிஐ. கன்னடத்தில் பேச முடியாது என பேசிய வங்கி மேலாளர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கன்னடத்தில் பேச முயற்சிப்பதாக தெரிவித்தார். கர்நாடகவில் இந்தி மொழி தொடர்பான பிரச்சனை எழுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி மேலாளர் விவகாரத்தின் சூடு குறைவதற்குள் இணையத்தில் கூகுள் ஊழியரின் பதிவொன்று விவாதங்களை கிளப்பியுள்ளது.
கூகுள் மென்பொருள் பொறியாளரின் பதிவு:
பெங்களூருவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிபவர் அர்பித் பாயா. இவர், நேற்றையத்தினம் தனது லிங்க்ட் இன் தளத்தில், ’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’ என்கிற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், ஆங்கிலத்தை கட்டாய மொழியாக மாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பதிவின் விவரம் பின்வருமாறு,
”இன்று, நான் இந்தியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது. நடந்ததை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் என் பேச்சைக் கேளுங்கள் மக்களே...
மகாராஷ்டிரா, கர்நாடகா அல்லது வேறு எந்த மாநிலத்திலும் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் அனைவருக்கும், உங்கள் குழந்தைகளை உண்மையில் தாய் மொழியில் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கிறீர்களா, அல்லது அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கிறார்களா? உண்மையாக பதில் சொல்லுங்கள்.
இன்றைய இளைய தலைமுறை தங்கள் தாய்மொழியில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவதில் மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நகரங்களில் இது அதிகமாகக் காணப்படுகிறது, கிராமப்புறங்களும் கூட. ஆங்கிலம் நாடு முழுவதும் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மொழியாக மாறும் காலத்திலிருந்து நாம் சில தலைமுறைகள் மட்டுமே தள்ளி இருக்கிறோம். இது ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்”
ஆங்கிலத்தை ஒரு கட்டாய மொழியாக மாற்றுங்கள்:
”நாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கிறோம்.ஆங்கிலத்தில் படிப்பதில் நாம் மிகவும் வசதியாக இருக்கிறோம்.விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பர போஸ்டர்கள் ஆங்கிலத்தில் உள்ளன. சிப்ஸ், பிஸ்கட் மற்றும் பிற பேக்கேஜிங் உள்பட அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன. திரைப்பட போஸ்டர்கள் ஆங்கிலத்தில் உள்ளன. வழிகாட்டும் அறிவுறுத்தல்கள் மற்றும் பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளன. மருந்து லேபிள்கள் கூட ஆங்கிலத்தில் உள்ளன. உணவகங்களில் மெனுக்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். சட்ட மற்றும் நிதி ஆவணங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். வலைத்தளங்கள் கூட இயல்பாக ஆங்கிலத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தால் சூழப்பட்டிருக்கிறோம்.
அப்படியானால், ஏன் ஆங்கிலத்தை ஒரு கட்டாய மொழியாக மாற்றக்கூடாது? நான் அனைவரையும் ஆங்கிலத்தில் உரையாடச் சொல்லவில்லை, ஆனால் ஆங்கிலம் அனைவருக்கும் ஓரளவு தெரிந்த ஒரு மொழியாக இருக்க முடியும், மேலும் யாராவது அதில் பேசினால் பரவாயில்லை (இன்று நமக்கு இருக்கும் நிலை போலல்லாமல்). இது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும். மொழி வாரியான பிரச்சினைகளை தவிர்த்து, நாம் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் - உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, சுகாதாரம், காலநிலை மாற்றம், உடல்நலம், ஊழல், நகர்ப்புற திட்டமிடல் போன்றவற்றில்.
நீங்கள் என் கருத்துடன் உடன்பட்டால், அருமை. இது ஒரு முட்டாள்தனமான கருத்து என்று நீங்கள் நினைத்தால், இந்தியில் கேட்டதற்காக ஒருவரை பார்க்கிங் செய்ய அனுமதிக்காதது மிகவும் பைத்தியக்காரத்தனமானது” என தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே மகாராஷ்டிரா,கர்நாடகவில் இந்தி எதிர்ப்பு தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.