இந்தியா

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி:  நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!
நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்
India Pakistan War Update in Tamil: கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய எல்லை பகுதியில் ட்ரோன், பீரங்கி, போர் விமானங்கள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் முப்படைகளும் தாக்குதலில் இறங்கியுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை கையில் எடுத்தது. இந்நிலையில், போர் பதற்றம் அதிரகரித்து காணப்படுவதாலும், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவில் அத்துமீறி தாக்குதலை நடத்தி வருவதால், ஸ்ரீநகர் உள்பட 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததை அடுத்து நேற்றிரவு ஜம்மு, பதான் கோட், உதம்பூர் ஆகிய இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதையடுத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்கள் இடைமறித்து இந்தியா அழித்தது. போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் சண்டிகர், ஶ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல், மும்பையில் உள்ள மிகப்பெரிய வர்த்தக துறைமுகமான முந்த்ரா துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்கள் விமான சேவையை மே 10-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கான பயணத்தொகை திருப்பியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.