இந்தியா

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல்... முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!

பாகிஸ்தான் தலைநர்கர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் விடிய விடிய தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல்... முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!
பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் பதில் தாக்குதல்
இந்தியாவின் எல்லை பகுதிகளில் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு முதல் திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை முறியடித்த இந்திய ராணுவம்இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்திய ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ட்ரோன், பீரங்கி மூலமாக இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில், அதிரடியாக செயல்பட்ட இந்திய விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்திய நிலையில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், எல்லையில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு உஷார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்திய படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியின் முக்கிய பகுதிகள், முக்கிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் மற்றும் இந்தியா கேட், குதுப் மினார் மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் இழப்புகள் இல்லை என்றும், ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தக்குதல் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.