பிரதமர் மோடி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாகத் தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி டிரம்பைக் கண்டு அஞ்சுவதாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பேட்டி
நேற்று (அக்.15) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டொனால்டு டிரம்பிடம், "இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த டிரம்ப், "ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சர்வதேசத் தடைகள் இருந்தபோதிலும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்த நிலையில், தற்போது டிரம்பின் இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் விமர்சனம்
இந்த நிலையில், ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாகப் பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளார் என்ற டிரம்பின் அறிவிப்பை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி டிரம்பைக் கண்டு பயப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, தனது 'எக்ஸ்' பக்கத்தில்,
* ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து, அதை டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்.
* மீண்டும் மீண்டும் அவமதிக்கப்பட்ட பிறகும் வாழ்த்துச் செய்தியை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்.
* அமெரிக்கா செல்லும் நிதி அமைச்சரின் பயணத்தை ரத்து செய்தார்.
* ஷார்ம் எல்-ஷேய்க் பயணத்தைத் தவிர்த்தார்.
* ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்தக் காரணங்களைக் குறிப்பிட்டு, "டிரம்பைக் கண்டு மோடி பயப்படுகிறார்" என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.