முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) காலமானார். சத்யபால் மாலிக் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு மே 11 முதல் டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர்
சத்யபால் மாலிக்கிற்கு கால், சிறுநீர், நுரையீரல் மற்றும் சிறுநீரக தொற்று ஏற்பட்டது. இவர் பீகார், கோவா, மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் ஆளுநராக இருந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 23, 2018 முதல் அக்டோபர் 30, 2019 வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தின் இறுதியில், மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தின் பாக்பத்தைச் சேர்ந்த ஜாட் தலைவரான மாலிக், மாணவர் தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
1974 ஆம் ஆண்டு சவுத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ்யசபா எம்.பி.யாகவும், பின்னர் அலிகாரிலிருந்து ஜனதா தளத்தின் மக்களவை எம்.பி.யாகவும் பணியாற்றினார்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
பின்னர், அவர் காங்கிரசுக்கும், பின்னர் லோக் தளத்திற்கும், பின்னர் சமாஜ்வாடி கட்சிக்கும் மாறினார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவால் மிகவும் வருத்தம் அடைந்தேன். சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.