புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விவரங்கள்
புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகுப்பில் சுமார் ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் இடம்பெறும். இந்தத் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் பாண்லே நெய், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது. அத்துடன் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு ஆகியவையும் இத்தொகுப்பில் இடம் பெறவுள்ளன.
விநியோக ஏற்பாடுகள்
இந்த பரிசுத் தொகுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. கான்பெட் நிறுவனம் பரிசு தொகுப்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் நெய் மட்டும் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

LIVE 24 X 7