இந்தியா

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லை- தீக்குளித்த மாணவி உயிரிழப்பு

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லை- தீக்குளித்த மாணவி உயிரிழப்பு
பாலியல் தொல்லை அளித்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
ஒடிசா மாநிலம், பாலசோரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எட். மாணவி ஒருவருக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.இது குறித்து மாணவி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.ஆனால் கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

மாணவி தீக்குளித்து தற்கொலை

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த மாணவி கடந்த சனிக்கிழமை தீக்குளித்தார். இதைத்தொடர்ந்து தீக்குளித்த ஒடிசா கல்லூரி மாணவி புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவிக்கு 95% தீக்காயங்கள் இருந்த நிலையில் மூன்று நாட்கள் உயிருக்குப் போராடிய பிறகு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



துறையின் தலைவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும்,மிரட்டியதாகவும் மாணவி புகார் குற்றம்சாட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் பாதிக்கப்பட் மாணவி நீதிக்கோரி கல்லூரியின் வாயிலுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். போராட்டங்கள் தீவிரமடைந்ததால், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பேராசிரியர் கைது

கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மாநில உயர்கல்வித் துறை விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார். வழக்கை முறையாகக் கையாளவும், தனது கடமைகளைச் செய்யவும் தவறியதற்காக கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.