இந்தியா

மும்பையில் பரபரப்பு: மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி கைதி தப்பியோட்டம்!

மும்பையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைது தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பரபரப்பு: மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி கைதி தப்பியோட்டம்!
Pregnant prisoner escapes from hospital
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் கைதி ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளை தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதியின் பின்னணி

வங்கதேசத்தை சேர்ந்த 25 வயதான ரூபினா இர்ஷாத் ஷேக் என்பவர், போலியான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் பெற்ற குற்றத்திற்காக, கடந்த ஆகஸ்ட் 7 அன்று வாஷி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்திய தண்டனைச் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தப்பியோடியது எப்படி?

கடந்த ஆகஸ்ட் 11 அன்று, ரூபினாவுக்குக் காய்ச்சல், சளி, மற்றும் தோல் தொற்று இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்காக ஜேஜே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி பிற்பகல், ரூபினா பாதுகாப்புக்கு வந்திருந்த ஒரு பெண் காவலரைத் தள்ளிவிட்டு, மருத்துவமனையில் இருந்த பெரும் கூட்டத்தைப் பயன்படுத்தித் தப்பியோடினார். இந்தச் சம்பவம் காவல்துறையினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது, “ரூபினாவைக் கூடிய விரைவில் கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.