சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று, வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியா திரும்புகிறார். இந்த நிகழ்வு, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தினருடன், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் நாராயணன், டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோரும் வரவேற்றனர்.
இந்தியா வந்த சுபான்ஷு சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு, தனது சொந்த ஊரான லக்னௌவுக்குச் செல்லவுள்ளார். அவர் புது தில்லியில் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியிலும் பங்கேற்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை (ஆகஸ்ட் 18) தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் அனுபவங்கள்குறித்து பிரதமரிடம் பகிர்ந்து கொள்வாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம், இளம் தலைமுறையினர் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவரது வருகை, இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுபான்ஷு சுக்லாவை வரவேற்றது குறித்து மத்திய அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் இது பெருமை சேர்க்கும் தருணம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இதைச் சாத்தியமாக்கிய நிர்வாகத்திற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.