கரூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசல் காரணமாக, சிறுவர்கள், பெண்கள் உட்படப் பலர் மயக்கமடைந்தனர். இதில், 33 பேர் உயிரிழந்து விட்டதா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள், பெண்கள் உட்படப் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்
கரூர் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.