ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதில் 5 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய கட்டடங்கள் சேதம் அடைந்தது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இருப்பினும் காஷ்மீர் சில கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் இந்தியா இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இது குறித்து மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ஆன்லைனில் வரும் தகவல்களை கவனத்துடன் கையாள வேண்டும். தவறான தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு எச்சரிக்கையுடன் சைபர் பாதுகாப்பு கையாளவும், ஆன்லைனில் இருக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும். தவறான தகவல்களுக்கு ஆளாக வேண்டாம். நாட்டுப்பற்றுடன், கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Critical Online Safety Alert always follow cybersecurity precautions. Stay cautious while online—don’t fall for traps or misinformation. Be patriotic, stay vigilant, stay safe.#Digitalindia #OperationSindoor pic.twitter.com/IIRKGzsh27
— Ministry of Electronics & IT (@GoI_MeitY) May 9, 2025
என்ன செய்யலாம்?
அதிகாரப்பூர் ஆலோசனைகள், உதவி எண்கள் மற்றும் உறுதி செய்யப்பட்ட தகவல்ளை மட்டும் பகிரவும்.
எந்த ஒரு செய்தியையும் பகிர்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வப் பக்கத்தில் உண்மை தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தவறான தகவல்கள் கிடைக்கப்பெற்றால் புகார் அளிக்கலாம்.
என்ன செய்யக்கூடாது?
நாட்டின் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை யாரும் வெளியிடவோ, வெளிப்படுத்தவோக்கூடாது.
உறுதி செய்யப்படாத தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
வன்முறை அல்லது மதக்கலவரங்களை தூண்டு தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.