K U M U D A M   N E W S
Promotional Banner

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்.. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.

71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற பிரபலங்களின் பட்டியல்!

இந்திய அளவில் சிறந்த திரைப்பட கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தேசிய விருதினை பெறும் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்க மாட்டோம்-அமைச்சர் அன்பில் மகேஸ்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.எதிர்ப்போம்.ஏற்க மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Jagdeep Dhankhar resigns: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளதிபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள்.. விமர்சிக்கும் மத்திய அரசு - திருச்சியில் கனிமொழி பேச்சு

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள் என மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துகிறது என திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவுப்பூர்வமானது.. முதல்வர் ஸ்டாலின்

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

நிலத்தடி நீருக்கு வரி.. திட்டத்தை கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்

“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

நிலத்தடி நீருக்கு வரி.. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் – NHAI மறுப்பு விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று விளக்கம் அளித்துள்ளது.

நேருவின் தனிப்பட்ட கடிதங்கள்: சோனியா காந்தியிடம் இருந்து திரும்ப பெற மத்திய அரசு சட்ட நடவடிக்கை!

நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது - கீ. வீரமணி

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யா பயணம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர்: நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு தகவல்களை பகிர்வார் என்று கூறப்படுகிறது

போர் பதற்றம்: எதையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது...மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

போர் பாதுகாப்பு ஒத்திகை...இருளில் மூழ்கியது டெல்லி

போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.