பிரதமர் ஏன் பயணத்தை ரத்து செய்தார்
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சம்விதான் பச்சாவ் பேரணி நடந்தது. இந்த பேரணில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவதாக பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன், புலனாய்வு மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
முன்னரே அறிந்ததால்தான் காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார். பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை. காஷ்மீரில் பாதுகாப்பை ஏன் பலப்படுத்தவில்லை? தகவல் கிடைத்ததும், உங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தீர்கள், ஆனால் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க கூடுதல் படைகளை அனுப்பவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் உளவுத்துறையின் தோல்வியை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பஹல்காம் நடந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் என அவர் கூறினார். மேலும், நாடு என்பது கட்சி, மதம், சாதிக்கு அப்பாற்பட்டது , உயர்ந்தது எனவும் கார்கே கூறினார்.