குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக அனல் பறந்து வருகிறது. நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய சீன விவகாரம், சபையில் மிகப்பெரிய மோதலாக உருவெடுத்தது.
சபாநாயகர் மீது காகிதங்கள் வீச்சு
இந்திய எல்லையில் சீன ஊடுருவல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனேவின் புத்தகக் குறிப்புகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோது, அதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததாகக் கூறி, இந்தியா கூட்டணி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த சில எம்பிக்கள், காகிதங்களைக் கிழித்துச் சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசியதால் அவையில் பெரும் பதற்றம் நிலவியது.
8 எம்பிக்கள் சஸ்பெண்ட்: குரல் வாக்கெடுப்பு
அவையில் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறி, 8 எம்பிக்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் மற்றும் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் ஆகிய 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
இந்த இடைநீக்க நடவடிக்கையைச் சுட்டிக்காட்டித் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அரசைச் சாடியுள்ளார்.அந்த பதிவில், "மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?
அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான கேள்விகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
எட்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கும் வகையில் மீதான இடைநீக்க நடவடிக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LIVE 24 X 7