திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திராவில் பூதாகரமாகியுள்ள நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஜயவாடாவில் Y.S சர்மிளா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய பாஜக அரசு, ஒரு பைசா கூட வழங்கவில்லை என குற்றச்சாட்டினார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் ஆக்கப்பூர்வமான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் அவர் கூறினார். ஆந்திர வெள்ளத்தில் 7 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியும், சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணியில் உள்ள பாஜக ஒரு பைசா கூட மாநிலத்திற்கு ஒதுக்காதது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.