அரசியல்

தவறி வந்த ஒரு வார்த்தை! திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் வருத்தம்!

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை த்ரிஷா குறித்துப் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தவறி வந்த ஒரு வார்த்தை! திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் வருத்தம்!
Nainar Nagendran regrets
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய்யின் அரசியல் பயணம் குறித்துக் குறிப்பிடுகையில் நடிகை திரிஷாவின் பெயரை இழுத்துப் பேசியது பெரும் விவாதமானது. தனிநபர் குறித்து அவர் பேசிய விதம் கண்ணியமற்றது எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

திரிஷா தரப்பு கண்டனம்

இந்த விவகாரத்தில் நடிகை திரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், "அரசியலில் எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் விமர்சிப்பது முறையல்ல" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உயரிய பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும், திரிஷாவின் பெயரையும் புகழையும் களங்கப்படுத்தும் வகையில் பேசக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்த நயினார்

திரிஷா தரப்பின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்தார். "என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தனிநபர் விமர்சனங்களையும் நான் செய்ததில்லை. அன்று தற்செயலாக வார்த்தை தவறி வந்துவிட்டது. எனது பேச்சால் யாரேனும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்காக நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.