மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
குடும்பங்களுக்குக் கருணைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வுகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அத்துடன், ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை
இளைஞர்களின் வேலைவாய்ப்புச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதியையும் அவர் முன்வைத்தார்.
மீனவர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான சலுகைகள்
மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகையை ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார். அதேபோல், நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச மின்சார அளவை உயர்த்துவதாக அறிவித்தார். அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட்களும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,400 யூனிட்களும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
சிறு வியாபாரிகளுக்குக் கடன் தள்ளுபடி
நகர்ப்புறங்களில் நடைபாதை ஓரம் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தனது ஆறாவது வாக்குறுதியாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த மூன்றாம் கட்ட அறிவிப்புகள் தேர்தல் களத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LIVE 24 X 7