சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; மூதாட்டிகள் வரை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. வெள்ளக் காலங்களில் வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் தடுப்போம் என வாக்குறுதி அளித்த திமுக, அதனை நிறைவேற்றவில்லை. 'ஸ்டாலின் தான்வந்தாரு.. நீச்சல் அடிக்க விட்டாரு' எனப் பெண்களே கிண்டல் செய்யும் அளவில்தான் அவர்களின் ஆட்சி உள்ளது" என்று சாடினார்.
போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு விமர்சனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகக் குற்றம் சாட்டினார். கஞ்சா விற்பனை தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவானாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு திமுக நிர்வாகிகளின் பின்னணியே காரணம் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டு, "போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு" உருவாக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
அதிமுகவின் சாதனைகள் மற்றும் விலைவாசி உயர்வு
திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏராளமான கலைக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்ட சாதனைகளை நினைவுகூர்ந்தார். தமிழகத்தில் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஆட்சியை அதிமுகவால் மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

LIVE 24 X 7