திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டு, அங்கு பேசி்யதாவது, "தற்போது திமுக கையில் முழு அதிகாரமும் இருந்திருதால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. முட்டுக்கட்டைப் போட்டி வரவிடாமல் செய்திருப்பார். தற்போது அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதால் நான் வந்துள்ளேன்.
திமுக கூட்டணியும் பாஜக கூட்டணியும் வெளியே தான் தனித்தனியாக இருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரே நோக்கம்தான். உங்களுக்காக உழைக்க இந்த விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம்.
விஜய் வந்தபிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. அதனால் கோபத்தில் உள்ளார்கள். மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத சூழலை நீங்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
நான் வந்த பிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. கல்லாபெட்டி கூட்டணி கலகலத்து போய் நிற்கிறது. அதை ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டுபோடமாட்டார்கள் போல. பா.ஜ.க. மற்றும் பலர் கூட்டணியிலும் இதைவிட பிரச்சினை இருக்கிறது. நம் மீது காண்டில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் வீட்டிலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம்.
தமிழ்நாடு காங்கிரஸை சில கோடிகளை கொடுத்து பையில் போட்டுள்ளார்கள்.உண்மையான காங்கிரஸ் நம்முடன் நிற்கிறது. சிறுபான்மையினர் மக்களிடம் திமுக சாயம் வெளுத்துவிட்டது. சிறுபான்மையினர் மக்கள் நம் பக்கம் நிற்கிறார்கள் என்று கடுப்பில் இருக்கிறார். கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள் நான் போகவில்லை. வீட்டுக்குள் போன பிறகுதான் கட்சி ஆரம்பித்துள்ளேன்".
கரூர் விஷயத்தை பத்தி ஊருக்கே தெரியும். ஆனால் என் மேல பழி போடுறாங்க. விஜய் மீது இவ்வளவு பழியை போட்டும் அவருடன் மக்கள் நிற்கிறார்கள் என்று நினைத்தார்கள். அடுத்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். அடுத்து, நமக்கு மட்டும் தனியாக கன்டிஷன் போட்டார்கள் மக்களை சந்திக்கக்கூடாது என்று நினைத்தனர். அதுவும் எடுபடவில்லை. அடுத்து, சுற்றியுள்ளவர்களை வைத்து தேர்தல் நேரத்தில் பிரச்சினை செய்ய பார்த்தனர். அதுவும் நடக்கவில்லை. என்னை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது.
234 தொகுதியிலும் விஜய்தான் வேட்பாளர். நம்ம வேட்பாளர்கள் டாட்டா, பிர்லா கிடையாது. நம்ம வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்த விஜய்தான் வேட்பாளர். இதுவரை யார் யாருக்கே ஓட்டுபோட்டோம். இப்போது உங்கள் வீட்டில் உள்ளவருக்கே ஒட்டு போடுகிறோம். உங்களுக்கே ஓட்டுபோட்ட மாதிரி.
ஒரு காமராஜர், ஒரு அண்ணா, ஒரு எம்.ஜி.ஆர். தானா. அவர்போல யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கிய நேரத்தில்தான் நாம் வந்திருக்கிறோம். இந்த தேர்தலில் த.வெ.க. ஆட்சியை அமைக்கிறோம். ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், இளைஞர்கள் நன்றாக இருப்போம். விவசாயிகள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் நன்றாக இருப்போம். பல ஆண்டுகள் நம் சந்ததியே நன்றாக இருக்கும். ஒட்டை வேறு யாருக்காவது போட்டு, வீணாக்கிவிடாதீர்கள். செய்ய முடிகிறதைத்தான் செல்வோம்.
மக்களுக்கு தப்பே நடக்காது. தப்பே நடக்க முடியாது. மக்கள் காசில் இருந்து ஒரு பைசாவைகூ-ட எடுக்கமாட்டேன். மற்றவர்களால் இதை தில்லா சொல்ல முடியுமா. உங்கள் (திமுக) ஆட்சி சரியாக இருந்தால், இரண்டரை வயது சிறுமியை திமுக நிர்வாகி கொலை செய்தானே அதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். ஐந்து வருடமாக போலீஸ் துறையை வைத்து என்ன செய்தீர்கள். ஆட்சி சிறப்பாக இல்லை என்பதால் தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை.
இது மட்டுமா மணல் திருட்டு, சட்டவிரோத கல்குவாரி, குடும்பமாக கொள்ளை அடிப்பது என ஆட்சியை நாறிப் போயுள்ளது. ஆட்சி முழுவதும் ஊழல் மலிந்து போயுள்ளது. எந்த முகத்தை வைத்து ஓட்டுக் கேட்பீர்கள். உங்கள் பணத்தை வைத்து இந்த தேர்தலில் ஒன்றும் செய்ய முடியாது. இது மாற்றத்திற்கான தேர்தல். ஒட்டுமொத்த மக்களாலும் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய தேர்தல்.
எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்கிறீர்கள். பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்திற்கான தேர்தல். தி.மு.க.வாலோ. மற்றும் பலராலோ ஒன்னும் செய்ய முடியாது. வரும் 23-ந் தேதி தேர்தலில் விசில் சின்னத்துக்கு ஓட்டுபோடுங்கள். அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்துள்ளோன். இங்கு இருமுனை போட்டிதான். ஒன்று தவெக இன்னொன்று திமுக. ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள். இது விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.

LIVE 24 X 7