புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி, திமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி எனப் பலத்த போட்டி நிலவுகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
விஜய்யின் எக்ஸ் பதிவு
இந்தத் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். "புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
கவனத்தை ஈர்க்கும் தவெக
புதுச்சேரியின் அனைத்து 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக, அங்குள்ள முக்கியக் கூட்டணிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. விஜய்யின் இந்தத் திடீர் பதிவு, வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும், தனது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7