90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட்ஸ் என ஒரு பட்டியலிட்டால் அதில் WWE நிச்சயம் இருக்கும். அந்த வகையில் 90-ஸ் கிட்ஸ்களின் ரத்தத்தில் ஊறிப்போயிருந்த ஒரு விஷயம் WWE.
ஜூலை 12, 2025 அன்று நடைப்பெற்ற "சண்டே நைட்ஸ் மெயின் ஈவென்ட்" (Saturday Night's Main Event) நிகழ்ச்சியுடன், தொழில்முறையான மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் மல்யுத்த வீரர் கோல்டுபர்க். 'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்றவர் கோல்டுபர்க்.
1997 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் WWE மற்றும் WCW போன்றவற்றில் பங்கேற்று தொழில்முறையான மல்யுத்த போட்டிகளில் விளையாடி வந்தார் கோல்டுபர்க். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியவர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
தனது காலத்தில் 2 முறை WWE Universal Champion (2017, 2020), World Heavyweight Champion (2003),WCW World Tag Team Champion, WCW World Heavyweight Champion போன்றவற்றை வென்றுள்ளார். மல்யுத்த போட்டிகளில் இவரது பங்களிப்பினை கௌரவிக்கும் விதமாக WWE Hall of Fame-ல் கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார்.
தன்னுடைய இறுதிப்போட்டியில் தோல்வி:
இந்நிலையில் நேற்று WWE உலக ஹெவிவெயிட் சாம்பியனுக்காக, குந்தருக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார் 58 வயதான கோல்டுபர்க். இப்போட்டியில் தோல்வியுற்ற நிலையில், WWE மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் போது, இவரது குடும்பத்தினர் அனைவரும் ரிங்கிற்குள் வருகை தந்தனர்.
ரசிகர்கள் முன்னிலையில் கோல்டுபர்க் பேசுகையில், “நான் இந்த வளையத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் சாத்தியமானது உங்களால் தான். நான் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தேன். ஜார்ஜியா பல்கலைக்கழக அணியான கோ புல்டாக்ஸ் அணிக்காக விளையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. ஆனால், வாழ்க்கை மல்யுத்தம் பக்கம் திரும்பியது.
உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே எல்லோரையும் நீங்கள் நடத்துங்கள். ஓய்வு பெறும் இந்த தருணத்தைப் பற்றி நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஏனென்றால் அது வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் பயணத்தில் உறுதுணையாக இருந்த எனது மனைவி, குழந்தைகள், நண்பர்கள், ரசிகர்களாகிய நீங்கள் என உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்றார்.
மல்யுத்தம் தவிர்த்து Universal Soldier: The Return, Ready to Rumble, Check Point, Con Man உட்பட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் கோல்டுபர்க். ஓய்வு முடிவினை அறிவித்த கோல்டுபர்க்குக்கு ரசிகர்கள், மல்யுத்த வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.