விளையாட்டு

IND VS ENG: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: வரலாற்றை மாற்றுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று (ஜூன் 20) தொடங்க்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது.

IND VS ENG: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: வரலாற்றை மாற்றுமா இந்தியா?
IND VS ENG: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: வரலாற்றை மாற்றுமா இந்தியா?
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக தலைமை தாங்குகிறார். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்திய அணி, இங்கிலாந்தில் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றது இல்லை என்ற நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், இளம் வீரர்கள் கொண்ட அணி பழைய வரலாற்றை திருத்தி, இங்கிலாந்து மண்ணில் வெற்றியை பதித்து, புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இன்று களம் இறங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பல புதிய வீரர்களுடன் இந்திய அணி உருவாகியுள்ளது. முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா நட்சத்திர வீரர்கள் ஓய்வுக்கு பிறகு நடைபெறும் தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்குப் பதிலாக இளம் திறமைகளை கொண்டுள்ள இந்திய அணி, ஒரு புதுப்பொலிவோடு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை போலவே, இங்கிலாந்து அணியும் புதிய வீரர்களுடன் களமிறங்க உள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி, கடந்த சில தொடர்களில் அதிரடியாக விளையாடியுள்ளது. தொடர்ந்து சொந்த மண்ணில் வெற்றியை குவித்து வரும் இங்கிலாந்து அணி நடப்பு தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கான முக்கியமான இலக்காக, இங்கிலாந்தின் மண்ணில் வெற்றி பெறும் முயற்சி மட்டுமல்லாமல், அந்த நாட்டில் தொடரை வெல்வதில் இலக்காக களமிறங்க உள்ளது. கடைசியாக 2007 ஆம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற இந்த தொடர், இந்திய அணிக்குப் புதிய அத்தியாயத்தைத் தொடக்கமாக்குமா? என்பதைக் காணவேண்டிய தருணமாக உள்ளது.

ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை

இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கு இரு ஜாம்பவான்களை பெருமைப்படுத்தும் விதமாக 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பை என பெயர் சூட்டப்பட்ட நிலையில், இதற்கான கோப்பையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து உத்தேச வீரர்களின் விவரம்

இந்தியா: லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், சாய் சுதர்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி அல்லது ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது ஆகாஷ் தீப்.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்கு, சோயிப் பஷீர்.