முதலாவது டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, தங்களது பேஜ்பால் கிரிக்கெட் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்று 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலைக்கு கொண்டுவர இந்திய அணி தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இப்போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
இப்போட்டியில், மழை இல்லை என்றால், போட்டி முழுமையாக நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 2-வது, 3-வது, நாள் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற நிலையில், இன்றையப் போட்டிக்கான இன்று 2வது டெஸ்டில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அணியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படும் நிலையில், நிதிஷ் ரெட்டி மற்றும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தர், தற்போது இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் செய்தி இந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2-வது டெஸ்ட் தொடரின் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களே மாற்றமின்றி இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி: ஜாக் கிராலி, பென் டக்கெட். ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்). ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், சோயிப் பஷீர்.
இந்தியா கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாத நிலையில், இந்திய அணிக்கு அவசியமானதாக உள்ளது. கடந்த 58 ஆண்டுகளில் இவ்விரு அணிகளும் 8 முறை மோதியுள்ள நிலையில், ஒரு போட்டி மட்டுமே டிராவில் முடிந்துள்ளது. எஞ்சிய 7 ஆட்டங்களிலும் இங்கிலாந்து மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இதனால், இப்போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. இப்போட்டியில், வெற்றிபெற்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வரலாற்றை மாற்றி எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 2 முதல் 5 வரை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும், இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கும்.