இந்திய கிரிக்கெட் கிங், ரன் மெஷின், சேஸ் மாஸ்டர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கபடும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் விரைவில் வெளியாகியுள்ளது. இந்த ஓய்வு செய்தி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். விராட் கோலியின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாது, பிசிசிஐ என்று அழைக்கப்படக்கூடிய இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, விராட் கோலியின் இந்த முடிவை பரிசீலிக்கக்கோரி பிசிசிஐ கோலியிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே-7 ஆம் தேதி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், வீரருமான ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார். அந்த நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேறு ஒருவரை புதிய கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவு சரி என ரோகித்தின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ரோகித் சர்மா நன்றாக விளையாடி வரும் சூழலில், அவரின் திடீர் ஓய்வு முடிவுக்கு காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தற்போது விராட் கோலியும், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில் விராட் கோலியின் இந்த முடிவு மிகப்பெரிய இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.