தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் முயற்சிகள் மற்றும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். தன்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
அண்ணாமலையின் விரிவான விளக்கம்
இந்தச் சர்ச்சை பேசுபொருளாக மாறிய நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு, இயற்கை விவசாயம் மற்றும் சமுதாய நலனுக்காக நான் செய்துவரும் பணிகள் குறித்து சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். கடந்த 2025 ஜூலை 12ஆம் தேதி ஒரு விவசாய நிலத்தை நான் வாங்கியது உண்மைதான். என்னுடைய மற்றும் மனைவியின் சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த நிலத்தை நான் வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான மாத வட்டியையும் வங்கி கணக்கு மூலம் செலுத்தி வருகிறேன்.
நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என கூறுபவர்கள், ‘பவர் ஆஃப் அட்டர்னி’ மூலம் ஒரு அசையா சொத்தை வாங்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்படி ஜூலை 10ஆம் தேதி என்னுடைய மனைவி அகிலாவுக்கு பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது. இந்த நிலத்தைப் பதிவு செய்வது தொடர்பாக ₹40.59 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய வணிக முயற்சிகள்
மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ் பால் பண்ணை அமைப்பதற்காகக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக, அவர்களின் முதலீட்டுக் கனவுகளை நினைவாக்கும் வகையில் விரைவில் ஒரு முதலீட்டு நிறுவனத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளேன்.
கடந்த சில ஆண்டுகளாக நான் எனது குடும்பத்துடன் செலவிடக் குறைந்த நேரமே கிடைத்தது. தற்போது எனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சட்டத்திற்கு உட்பட்டு சில வணிக முன்னெடுப்புகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எனது எல்லாச் செயல்களிலும் உண்மையையும் நேர்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சில ஆர்வக்கோளாறுகள் வெட்டியாக நேரத்தை வீணடித்துப் பேசிக் கொண்டிருப்பதை விட்டு, பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவார்கள் என நினைக்கிறேன்.” என்று அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.