திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மகனின் திருமணத்திற்கு அழைக்காததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தனது மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து- மருத்துவமனையில் அனுமதி
ஆரைக்குளம், சர்ச் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக உதவி மாவட்ட அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு, சகாரியா (66) என்பவர் தீக்காயங்களுடன் வீட்டின் வெளியே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி மெர்சி (57) மற்றும் மகன் ஹார்லி பினோ (27) ஆகியோர் வீட்டிற்குள் தீயில் சிக்கி வெளியே வர முடியாமல் இருந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்து இருவரையும் மீட்டனர். படுகாயமடைந்த மூவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு (TVMCH) கொண்டு செல்லப்பட்டனர்.
திருமணத்துக்கு அழைக்காததால் ஆத்திரம்
இதற்கிடையில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மெர்சியும், ஹார்லி பினோவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சகாரியாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருப்பதும், மூத்த மகனுக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. அந்த திருமணத்திற்கு சகாரியாவை அழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், சகாரியாவுக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறின்போது, ஆத்திரமடைந்த சகாரியா, மனைவி மற்றும் மகன் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். பின்னர் தானும் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ள சகாரியா, அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.