சாத்தூரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் ஹிந்துஸ்தான் என்ற தனியார் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், திடீரென இன்று காலை பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. உடனே இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மட்டும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நான்கு பேர் மீட்கப்பட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
வேறு யாரும் பட்டாசு தொழிற்சாலையின் உள்ளே சிக்கி உள்ளனரா என்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் தேடி வருகின்றனர். இதனிடையே, ஆலையின் போர்மேன் லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.