தமிழ்நாடு

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு!
Gold Rate
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தற்போது அது கட்டுக்கடங்காத வேகத்தில் உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சவரனுக்கு ரூ.1,840 உயர்வு

கடந்த வார இறுதியில் தங்கம் ஒரு கிராம் ரூ.14,420-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,360-க்கும் விற்பனையானது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,650-க்கும், சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை ஏறும் தற்போதைய போக்கு நகை வாங்குவோரைத் திகைக்க வைத்துள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தற்போது 3 லட்ச ரூபாயைத் தொட்டுள்ளது. தங்கத்திற்கு இணையான முதலீடாகக் கருதப்படும் வெள்ளியின் விலையும் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது நுகர்வோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.