தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து, வாடிக்கையாளர்களைக் கவலையடையச் செய்து வருகிறது. விடுமுறைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 22) விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி ஏற்றம், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சம் என்ற மைல்கல்லை நெருங்கியுள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,480-க்கு விற்பனை ஆகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை புதிய உச்சம்
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.231-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.31 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.
வருங்கால விலை குறித்த முதலீட்டாளர் கணிப்பு
தை மாதம் முகூர்த்த மாதம் என்பதால், திருமணப் பருவத்தின் காரணமாகத் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக, ஒரு கிராம் தங்கம் ரூ.15,000 வரை உயர வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகக்கூடும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.

LIVE 24 X 7