தமிழ்நாடு

மாணவர்களே தயாராகுங்கள்.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

மாணவர்களே தயாராகுங்கள்.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
public examination time table
ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியால் வெளியிடப்பட்டது. மேலும், ரத்து செய்யப்பட்ட 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான அரியர் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்புத் தேர்வு

12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் 2026 மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்தத் தேர்வைச் சுமார் 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14, 2026 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்புத் தேர்வு

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் 2026 மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வைச் சுமார் 8.70 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 10 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23, 2026 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28, 2026 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகிறது.

11 ஆம் வகுப்பு அரியர் தேர்வு

இந்தக் கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான அரியர் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 11 ஆம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதால் மாணவர்கள் பதற்றமடையத் தேவையில்லை என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ், உற்சாகத்துடன் தேர்வுக்குத் தயாராகும்படி மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

Image

Image